தமிழ்நாட்டில் 16 வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெற்றுவருகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.
திரு.வி.க. சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 399 வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 983 பேர் வாக்களித்துள்ளனர்.
ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 617 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 29 பேர் வாக்களித்துள்ளனர்.
துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 617 வாக்காளர்கள் உள்ளனர் அவர்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 306 பேர் வாக்களித்துள்ளனர்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 506 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் வினோஜ் செல்வமும் அவரை எதித்து திமுகவின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபு போட்டியிடுகிறார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு - சேப்பாக்கம்
சென்னை: ராயபுரம், ஆர்.கே. நகர், திரு.வி.க. நகர், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெறுகிறது.
சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை!
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வருகைதந்த அனைவரும் முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கரோனா தொற்று விதிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.