தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம்! - election

சென்னை: தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் பங்குபெறும், வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்காண முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம்

By

Published : May 14, 2019, 6:13 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள தமிழ்நாடு, கேரளா, குஜராத், பாண்டிச்சேரி, இலட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கைகான முன்னேற்பாடு குறித்த பயிற்சி முகாம் நாளை சென்னையில் நடக்க உள்ளது. இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு எண்ணிக்கையை முன்னேற்பாடு பணிகள் குறித்த பயிற்சியை வழங்குகின்றனர்.

இம்முகாமில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இக்கூட்டத்திற்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details