சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தனியார் கல்லூரி மாணவியிடம் உதவி பொறியாளராக உள்ள கமல கண்ணன் என்பவர் ஆபாசமாக செல்போனில் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், "மாநகராட்சியில் உதவி பொறியாளர் என்கிற பொறுப்பு காவல் துறையில் உதவி ஆணையர் பொறுப்புக்கு சமம். மாதந்தோறும் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். எனவே காதல் செய்யுமாறு பெண்ணிடம் கமலகண்ணன் பேசியுள்ளார்.
கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு - மாநகராட்சி அலுவலர் கைது...!
சென்னை: கல்லூரி மாணவியிடம் ஆபசாமாக பேசிய மாநகராட்சி உதவி ஆணையரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மாநகராட்சி அலுவலர் கைது
கல்லூரி மாணவி உடனடியாக எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் இளைஞர் உயிரிழப்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை