தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிக்கரணை குப்பை கொட்டும் வளாகத்தில் மாநகர ஆணையர் ஆய்வு! - குப்பை கொட்டும் வளாகம்

சென்னை: பெருங்குடி அருகே உள்ள பள்ளிக்கரணை குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெறும் திடக்கழிவுகளை பிரித்தெடுக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

chennai corporation

By

Published : Jul 26, 2019, 2:31 PM IST

பள்ளிக்கரணை குப்பை கொட்டும் வளாகத்தில் திடக்கழிவுகளை பிரித்தெடுத்தல், சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுவந்த குப்பைகளை பிரித்தெடுத்து சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

சென்னை பெருநகர மாநகராட்சி

இங்கு 37 ஆயிரத்து 509 கனமீட்டர் அளவிற்கான திடக்கழிவுகள் இருகின்றன. இந்நிலையில் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் நடக்கும் இப்பணியில் தினமும் 250 கனமீட்டர் அளவிற்கான குப்பைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

இப்பணிகளை நேரில் வந்து பார்வையிட்ட சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நான்கு மாதத்திற்குள் இப்பணிகள் அனைத்தையும் முடிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் பத்து மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குப்பைகளை உரமாக்கும் நிலையத்தையும் பார்வையிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details