தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் போரூரில் இயங்கி வரும் கரோனா ஸ்கிரீனீங் சென்டரை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கரோனா இரண்டாம் அலையை தடுக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை தரப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை நகரில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சோதனை செய்யப்படுகிறது. இதனை 25 ஆயிரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முழுதும் 12 மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிரித்து அனுப்பப்படுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும்.
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை ஸ்கிரீனீங் சென்டரில் தடுப்பூசி கிடையாது. கரோனாவால் பாதிக்கப்பட்ட உடனே தடுப்பூசி போட முடியாது.
நடிகர் விவேக் இழப்பை பேரிழப்பாக கருதுகிறேன். விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை.
12 லட்சம் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோர் 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ் திரையுலகம் திறமையான நடிகரை இழந்துவிட்டது - நடிகர் அர்ஜூன்