சென்னை:சென்னை பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio Mining) முறையில் அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டெடுக்கும் திட்டப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
மேலும், இம்மையத்தில் இயந்திரங்களை பொருத்தும் பணியும், கட்டிடப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், பணிகளை விரைந்து முடித்து குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் முறையை விரைவில் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் சோதனை முறையில் செயல்பட்டு வரும் கட்டிட இடிபாடு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆலையையும், தோட்டக்கழிவுகள், தேங்காய் ஓடுகளை மறுசுழற்சி செய்யும் 80 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.