சீனாவின் ஹூபே மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதைத் தடுக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த வைரஸ் சீனாவை தவிர்த்து அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு தமிழர்கள், எட்டு சீன நாட்டினர் ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
கரோனா வைரஸ் கண்காணிப்பிலிருந்த 10 பேர் வீடு திரும்பினர் - கொரோனா வைரஸ் செய்திகள்
சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் கண்காணிப்பிலிருந்த 10 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள் பத்து பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய அவர்களின் சளி, ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிங் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பபட்டது. இந்நிலையில் கண்காணிப்பிலிருந்த பத்து பேரும், கரோனா வைரஸால் பாதிகப்படவில்லை என மாதிரி முடிவுகள் வந்ததால், அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். மீதமுள்ள சீனாவைச் சேர்ந்த எட்டு பேரும் விமானத்திற்காக காத்திருக்கின்றனர். அதேபோல் ராமநாதபுரத்தில் தொடர் கண்காணிப்பில் இருந்தவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டு காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் தாக்குதல் - ஐந்து பேருக்கு ரத்தப் பரிசோதனை