சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நிலை தேறி வந்த நிலையில், மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் - j.Anbazhakan
19:54 June 08
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மூச்சு திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அண்மையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதால் வென்ட்டிலேட்டர் பொருத்தப்பட்ட நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வென்ட்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை குறைந்திருப்பதாக கூறினர்.
தற்போது, ஜெ. அன்பழகன் உடல்நிலை தேறி வந்த நிலையில், மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மாலையிலிருந்து அவருக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. அவரது இதயம், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.