தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி திருவிழா - corona cases in chengalpattu

செங்கல்பட்டு: முடிச்சூர் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி திருவிழா முகாமில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கரோனா தடுப்பூசி திருவிழா
கரோனா தடுப்பூசி திருவிழா

By

Published : Apr 15, 2021, 8:01 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாளாக கரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக சென்னைக்கு அருகாமையில் புறநகர் பகுதிகளில் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸின் ஆலோசனைப்படி முடிச்சூர் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி திருவிழா முகாம் நடைபெற்றது.

அதில் முடிச்சூர் ஊராட்சி, சுகாதார நிலையம் இணைந்து இந்த முகாமை நடத்தினார்கள். இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் முகக்கவசங்கள் அணிந்து, தகுந்த இடைவெளியை விட்டு ஆர்வமுடன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 772 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details