சென்னையை அடுத்த பரங்கிமலையில் காவலர்கள் குடும்பத்தினருக்குத் தடுப்பூசி போடும் விழா நடைபெற்றது. இதில், காவல் துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தசுமார் 1,200பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
காவல் துறையினர் மோட்டார் சைக்கிள்களில் சென்று தடுப்பூசி விழிப்புணர்வுப் பேரணி - Corona vaccine camp at parangimalai
சென்னை: பரங்கிமலையில் கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல் துறையினரின் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பரங்கிமலை
தொடர்ந்து, கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல் துறையின் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை தெற்கு சென்னை இணை ஆணையர் லட்சுமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், கரோனா குறித்த விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க:டெல்லியில் கரோனா தொற்றை துஷ்பிரயோகம் செய்யும் கைதிகள்!