தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 2, 2021, 8:26 PM IST

ETV Bharat / state

2,659 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி சார்பில் இரண்டாயிரத்து 659 மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை கரோனா விவரங்கள்
கரோனா தடுப்பூசி

சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் பதிவு செய்யும் நபர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு மிக அருகாமையில் அல்லது அவர்களது இல்லத்திற்கு சென்று தடுப்பூசி வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் இதுவரை இரண்டாயிரத்து 464 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 195 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி என மொத்தம் இரண்டாயிரத்து 659 மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கலாம் என ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில் தற்போதைய தடுப்பூசி இருப்பினை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் கரோனா பாதிப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் சேவை புரியும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட தடுப்பூசி முகாம்களின் வாயிலாக சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 15 லட்சத்து 34 ஆயிரத்து 439 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், நான்கு லட்சத்து 88 ஆயிரத்து 706 நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் மே 31ஆம் தேதி வரை 20 லட்சத்து 23 ஆயிரத்து 145 தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details