தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கரோனா உறுதி!

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கரோனா உறுதி
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Sep 29, 2020, 5:33 PM IST

Updated : Sep 29, 2020, 7:55 PM IST

17:31 September 29

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 546 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 943ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (செப்.29) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் இரண்டு தனியார் ஆய்வகங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கரோனா பரிசோதனை ஆய்வகங்களில் எண்ணிக்கை 186ஆக உயர்ந்துள்ளது. எனவே தற்போது 66 அரசு அலுவலகங்களும், 120 தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் புதிதாக 84 ஆயிரத்து 163 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5,537 நபர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஏழு நபர்கள் என 5,546 பேருக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 70 லட்சத்து 50 ஆயிரத்து 820 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 லட்சத்து 91 ஆயிரத்து 943 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 46 ஆயிரத்து 281 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,501 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 39 ஆயிரத்து 209ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 70 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 453ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்: 

சென்னை - 1,66,029 

செங்கல்பட்டு - 35,228 

திருவள்ளூர் - 32,173 

கோயம்புத்தூர் - 31,489 

காஞ்சிபுரம் - 21,806 

கடலூர் - 19,955 

சேலம் - 19,254 

மதுரை - 16,540 

திருவண்ணாமலை - 15,321 

தேனி - 14,825 

வேலூர் - 14,655 

விருதுநகர் - 14,395 

தூத்துக்குடி - 13,360 

ராணிப்பேட்டை - 13,306 

திருநெல்வேலி - 12,645 

கன்னியாகுமரி - 12,610 

விழுப்புரம் - 11,586 

தஞ்சாவூர் - 10,922 

திருச்சிராப்பள்ளி - 10,429 

கள்ளக்குறிச்சி - 9,154 

புதுக்கோட்டை - 8,992 

திண்டுக்கல் - 8,822 

திருப்பூர் - 8,023 

தென்காசி - 7,283 

திருவாரூர் - 7,136 

ஈரோடு - 6,642 

ராமநாதபுரம் - 5,530 

நாமக்கல் - 5,327 

சிவகங்கை - 5,145 

நாகப்பட்டினம் - 5,194 

திருப்பத்தூர் - 4,913 

கிருஷ்ணகிரி - 4,512 

நீலகிரி - 4,093 

அரியலூர் - 3,726 

தருமபுரி - 3,776 

கரூர் - 3,029 

பெரம்பலூர் - 1,822 

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 944 

ரயில் மூலம் வந்தவர்கள் - 428



 

Last Updated : Sep 29, 2020, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details