தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு முழுமையாகக் கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான வீடுகள், மருத்துவ ஆய்வகங்கள், மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அனைத்திற்கும் மருத்துவக் கழிவுகளை எவ்வாறு கையாள வேண்டும், அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதலின்படி அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து இன்றுவரை பொது மருத்துவமனைகள், ஆய்வகங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் சேகரிக்கப்பட்ட கழிவுகள், உள்ளாட்சி அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் ஆகியவை மொத்தமாக 490.046 டன் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டுள்ளன.