சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் நடிகை மீரா மிதுனை நேற்று (ஆக. 14) கேரளாவில் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஆக. 15) சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் காவலர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் மீரா மிதுன் ஈடுபட்டு வந்தார்.