கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகெங்கிலும் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை மருத்துவப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, வெளிநாட்டிலிருந்து சென்னை வரும் சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா என்பதைக் கண்டறிய விமான நிலைய மருத்துவக் குழுவினர் மேல் சிகிச்சைக்காக தாம்பரம் சானிடோரியம் அரசு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.