கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் சில மண்டலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் தாக்கம் குறையாமல் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
அண்ணா நகர் கோடம்பாக்கம் ஆகிய இரு மண்டலங்களிலும் முன்னதாகவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த இரண்டு மண்டலங்களிலும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணம் அடைந்தவர்களின் விழுக்காடும் அதிகமாக உள்ளது.
மற்ற மண்டலங்களைக் காட்டிலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் இந்த இரண்டு மண்டலங்களில் மட்டுமே அதிகமாகவும் உள்ளது.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 173 நபர்கள் இந்த கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 808 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 653 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தத் வைரஸ் தொற்றினால் இறந்தவர்களில் எண்ணிக்கை 2712 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
கோடம்பாக்கம் - 1577 நபர்கள்
அண்ணா நகர் - 1621 நபர்கள்
ராயபுரம் - 907 நபர்கள்
தண்டையார்பேட்டை - 961 நபர்கள்