2ஆவது தவணை கரோனா நிதி: நாளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
சென்னை: கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கரோனா நிவாரண நிதி 2-வது தவணை ரூ.2,000 - முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
நாளை (ஜூன்.03) காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அதன்படி,
- கரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணை 2,000 ரூபாய் வழங்கும் திட்டம்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம்.
- தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையின் கீழ் 12,959 கோயில்களில் மாதச் சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவியாக 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம்.
- கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம்.
- கரோனாவால் உயிரிழந்த மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி.
- மேலும், ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டப் பயனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
Last Updated : Jun 3, 2021, 6:59 AM IST