தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: அண்ணாநகரில் ஒரே நாளில் 65 மருத்துவ முகாம்கள்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்

சென்னை: அண்ணா நகரில் இன்று (ஜூலை 29) ஒரே நாளில் 65 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Corona Prevention: 65 Medical Camps in Anna Nagar!
Corona Prevention: 65 Medical Camps in Anna Nagar!

By

Published : Jul 30, 2020, 2:01 AM IST

சென்னையில் கரோனா தொற்று கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு ஆகிய மண்டலங்களில் அதிவேகமாகப் பரவிவருகிறது. இருப்பினும், குணமடைந்தவரின் விகிதமும் அதற்குச் சமமாக உள்ளது. இந்தத் தொற்றை மேலும் குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தினமும் சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி இன்று (ஜூலை 29) மாநகரம் முழுவதும் 508 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக தொற்று அதிகம் பரவிவரும் அண்ணாநகரில் 65 மருத்துவ முகாம்களும், அடுத்தப்படியாக தேனாம்பேட்டையில் 60 மருத்துவ முகாம்களும், கோடம்பாக்கத்தில் 55 மருத்துவ முகாம்களும் நடைபெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற 508 மருத்துவ முகாம்களில் மொத்தம் 21 ஆயிரத்து 837 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 1,099 நபர்களுக்கு அறிகுறி இருந்ததால், அவர்கள் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details