தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி: அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை தீவிரம் - covid-19

சென்னை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அலுவலகங்கள், காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருவோருக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டுவருகிறது.

corona precautionary activities in  commissioner office
corona precautionary activities in commissioner office

By

Published : Mar 17, 2020, 2:50 PM IST

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெர்மல் ஸ்கேனர் கருவியைப் பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டுவருவதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்பிற்காக கிருமி நாசினி மருந்தும் கொடுக்கப்பட்டுவருகிறது.

முன்னெச்சரிக்கைகளை அதிகரிக்கும் அரசு அலுவலகங்கள்

குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் முதலமைச்சரின் உத்தரவின்பேரில், புகார் அளிக்க வருவோருக்கு கிருமி நாசினி மருந்து கொடுக்கப்பட்ட பிறகே அலுவலகங்களினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: கொரோனா: இந்தியாவுக்குள் நுழைய தடை!

ABOUT THE AUTHOR

...view details