சென்னையில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று (மே 8) 33, 406 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6846 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்தப் பகுதிகளில் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதுவரை 3 லட்சத்து 83 ஆயிரத்து 644 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 45 ஆயிரத்து 633 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 32 ஆயிரத்து 858 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி 5153 பேர் உயிரிழந்துள்ளனர்.