சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபருக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள தனி அறையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்றிரவு அந்த நபர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரது வீட்டுக்குச் சென்ற காவலர்கள், அவரை மருத்துவமனை அழைத்துச்செல்ல முயன்றனர்.
அப்போது ”என்னிடம் யாராவது நெருங்கினால் உங்களை கட்டிப்பிடித்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.
மருத்துவர்களை மிரட்டிய கரோனா நோயாளி பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காவலர்கள் உதவியுடன் மருத்துவக் குழுவினர் அவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கரோனா நோயாளிகள்!