தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நோயாளியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு! - அழுகிய நிலையில் கண்டெடுப்பு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளி நீண்ட நாள்களாக காணாமல் போயிருந்த நிலையில், அழுகிய நிலையில் சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Corona death
Corona death

By

Published : Jun 8, 2021, 11:10 PM IST

சென்னை: மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மௌலி, ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுனிதாவுக்கு கடந்த 22ஆம் தேதி கரோனா தொற்றால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில், மௌலியின் மனைவி சுனிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மனைவிக்கு உணவு கொடுப்பதற்காக மௌலி கடந்த 23ஆம் தேதி சென்றபோது, அங்கு அவர் இல்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மௌலி புகார் அளித்துள்ளார்.

சுனிதாவை மருத்துவமனை முழுவதும் ஊழியர்கள் தேடியபோதும், எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, பூக்கடை காவல் நிலையத்தில் மௌலி புகார் அளித்துவிட்டு, சுனிதாவின் புகைப்படத்தைக் கொண்டு வர சென்றுள்ளார். இதற்கிடையே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மௌலியால் புகைப்படத்தை கொண்டு வர இயலவில்லை.

இந்த நிலையில் எட்டாவது மாடியில் துர்நாற்றம் வீசியதால், ஊழியர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று இருந்தது. இதையடுத்து, அந்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்வு செய்யுமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சடலத்தை மௌலியிடன் காண்பித்த நிலையில், அது அவரது மனைவி சுனிதா என்பதை அவர் உறுதி செய்தார். இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details