தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: சென்னையில் 30 முதல் 39 வயது உடையவர்களுக்கே அதிக பாதிப்பு

சென்னை: சென்னையில் 30 முதல் 39 வயது உடையவர்களே கரோனா வைரஸ் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா: சென்னையில்30 முதல் 39  வயது உடையவர்களுக்கே அதிக பாதிப்பு
கரோனா: சென்னையில்30 முதல் 39 வயது உடையவர்களுக்கே அதிக பாதிப்பு

By

Published : Oct 12, 2020, 12:22 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருபுறம் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுவந்தாலும், இதற்கு நிகராக குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 91 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 14 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயது உடைய 18.81 விழுக்காடு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக 50-59 வயது உடைய 18.70 விழுக்காடு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 848 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 751 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 415 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details