சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் குறிப்பிட்ட பகுதிகளான அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தப் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக 15 மண்டலங்களில் தினமும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 507 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது . இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை, அண்ணா நகரில் 59 மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.