தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகன்களுக்கு கரோனா- மன உளைச்சலில் உயிரிழந்த தந்தை! - மூச்சு திணறல்

சென்னை: தனது இரு மகன்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மன உளைச்சலில் மூச்சு திணறல் ஏற்பட்டு தந்தை உயிரிழந்தார்.

Corona issue father death
Corona issue father death

By

Published : May 5, 2020, 3:03 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இதில், சென்னை மாநகராட்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேத்துபட்டு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு( 70). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டு மகன்களும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் இவர்களது குடும்பத்தினர் அனைவரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவர்களது தெரு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனது மகன்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை எண்ணி வடிவேலு மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். மேலும் தனது மகன்களால் தெருவில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தி இருப்பதை கண்டும் வேதனை அடைந்துள்ளார்.

இதனால் இவருக்கு நேற்று உடல் நிலை சரியில்லாமல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பார்க்க: நீட் தேர்வு எப்போது? தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details