கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 664 நபர்கள் மட்டுமே தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கை 358 எனக் குறைந்துள்ளது.
பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையைவிட குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 49 என அதிகரித்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை ஜூன் 10ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 237 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 16 ஆயிரத்து 811 நபர்களும், ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களும் என 16,813 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு கோடியே 86 லட்சத்து 90 ஆயிரத்து 398 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 23 லட்சத்து 8 ஆயிரத்து 838 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 664 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். குணம் அடைந்த 32 ஆயிரத்து 49 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 என உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மேலும் புதிதாக 1,390 நபர்களுக்கு தொற்று பதிவாகியுள்ளது. மே 30ஆம் தேதி அதிகபட்சமாக ஆயிரத்து 784 நபர்களுக்குத் தொற்று பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மே 30ஆம் தேதி அதிகபட்சமாக 493 எனப் பதிவானது. தற்போது 350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மே 12ஆம் தேதி ஏழாயிரத்து 564 என அதிகபட்சமாகப் பதிவாகியிருந்த கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து, இன்று (ஜூன் 10) ஆயிரத்து 723 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மே 27ஆம் தேதி 4,734 என அதிக அளவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை இருந்தது.
தொற்றுப் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டு தற்போது 2,236 எனப் பதிவாகியுள்ளது. மே 21ஆம் தேதி அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 36 ஆயிரத்து 184 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஊரடங்கு, அரசின் தொடர் முயற்சியால் தினசரி பாதிப்பு 16 ஆயிரத்து 813 என இன்று (ஜூன் 10) குறைந்துள்ளது. அதேபோல் முக்கியமாக சென்னையில் மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210 எனக் குறைந்துள்ளது.
ஆனால் கோயம்புத்தூரில் 21 ஆயிரத்து 184 நபர்களும், ஈரோட்டில் 13,202 நபர்களும், சேலத்தில் 10 ஆயிரத்து 168 நபர்களும், திருப்பூரில் 17 ஆயிரத்து 485 நபர்களும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை: 5,22,052
கோயம்புத்தூர்: 1,97,601
செங்கல்பட்டு : 1,49,431
திருவள்ளூர்: 1,06,593
சேலம்: 76,656
திருப்பூர்: 72,037
ஈரோடு: 72,262
மதுரை: 69,320
காஞ்சிபுரம்: 67,243
திருச்சிராப்பள்ளி: 63,784
தஞ்சாவூர்: 55,926
கன்னியாகுமரி: 55,070
கடலூர்: 53,851
தூத்துக்குடி: 51,428
திருநெல்வேலி: 45,995
திருவண்ணாமலை: 45,301
வேலூர்: 44,905
விருதுநகர்: 41,857
தேனி: 40,111
விழுப்புரம்: 39,278
நாமக்கல்: 38,912
ராணிப்பேட்டை: 37,894
கிருஷ்ணகிரி: 36,342
நாகப்பட்டினம்: 34,477
திருவாரூர்: 34,255
திண்டுக்கல்: 29,757
புதுக்கோட்டை: 25,188
திருப்பத்தூர்: 25,728
தென்காசி : 24,973
நீலகிரி : 24,301
கள்ளக்குறிச்சி: 24,117
தருமபுரி : 21,712
கரூர்: 20,149
ராமநாதபுரம்: 18,439
சிவகங்கை : 15,929
அரியலூர்: 13,324
பெரம்பலூர்: 10,133
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 1,004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,075
ரயில் மூலம் வந்தவர்கள்: 428
இதையும் படிங்க: எந்த அடிப்படையில் நடைபெறும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - அமைச்சர் தகவல்!