தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிக்கப்பட்ட முதியவர் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அவதி - சித்த மருத்துவமனை

சென்னை: தாம்பரம் பேருந்து நிலையத்தில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள முதியவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுகாதாரத் துறை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எழுத்தாளர் அகத்தியன்
எழுத்தாளர் அகத்தியன்

By

Published : Jun 26, 2020, 6:57 PM IST

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் அகத்தியர் தாசன்(65). இவர் எழுத்தாளராக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்று கரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அகத்தியர் தாசன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற விரும்பவில்லை.

சித்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றால் விரைவில் கரோனாவில் இருந்து குணமடைந்து விடலாம் என்று எண்ணிய அவர், சித்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற விரும்புவதாக ராயப்பேட்டை மருத்துவர்களிடம் தெரிவித்தார். ஆனால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
சார்பாக அகத்தியர் தாசனை சித்த மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், நேற்று இரவு (ஜூன் 25) ராயப்பேட்டையில் இருந்து நடந்தே தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள சித்த மருத்துவர்மனைக்கு வந்தார். அங்கு, தனக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். சித்த மருத்துவமனையில் கரோனாவுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என மருத்துவர்கள் கூறி அவரை திருப்பி அனுப்பினர்.

எழுத்தாளர் அகத்தியன்
இதையடுத்து, நேற்று இரவிலிருந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் அகத்தியர் தாசன் தங்கியுள்ளார். அவ்வழியாக செல்வோரிடம் தனக்கு கரோனா இருப்பதாக கூறி வருகிறார். இதனால் அவ்வழியாக செல்வோர் அதிர்ச்சியடைந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் தங்கி வருகின்றனர். அவர்களுக்கும் கரோனா தோற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தாம்பரம் நகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் இல்லை என அலட்சியமாக கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details