காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சி.வி. ஹரி கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது தந்தை சி.வி.ராஜசேகர் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு 12 உட்பிரிவு 3 கீழ் பேரிடரால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வரவில்லை என்றால், மத்திய அரசினுடைய குறைந்தபட்ச நிவாரணம் வழங்க கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.
அதன்படி, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம், கரோனோ பாதிப்பால் ஒரு வாரம் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 300, ஒரு வாரத்துக்கு மேல் சிகிச்சை பெறக் கூடியவர்களுக்கு ரூ. 12 ஆயிரத்து 700 வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் 2016ஆம் விதிமுறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.