தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடசென்னையில் 15 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

வடசென்னையில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 மண்டலங்களின் மொத்த பாதிப்பு 15,846 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Jan 19, 2022, 7:02 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர் ஆகிய 6 மண்டலங்களின் ஒட்டுமொத்த பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கடந்த இரண்டு நாள்களாக ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது.

கடந்த 17 ஆம் தேதி சென்னையில் உள்ள மண்டலங்களின் கரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "வடசென்னையில் உள்ள 6 மண்டலங்களின் மொத்த பாதிப்பு 15,846 ஆக உள்ளது. மேலும் ஒருநாள் பாதிப்பு 1,177 ஆக உள்ளது.

இதில் குறிப்பாக முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதி அடங்கிய திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 386 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மணலியில் 251 பேருக்கும், மாதவரத்தில் 197 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 161 பேருக்கும், திருவெற்றியூரில் 129 பேருக்கும், ராயபுரத்தில் 53 பேருக்கும் என மொத்தம் 1,177 பேருக்கு புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

மேலும் சென்னை மாநகராட்சியின் கடந்த 14 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் ஒப்பீட்டின்படி ஒருநாள் பாதிப்பு ஆயிரத்து 1,982 ஆக இருந்தது. ஆனால் 16 ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதி அறிக்கையின் ஒப்பீட்டின்படி ஒரு நாள் கரோனா பாதிப்பு சற்று குறைந்து 1,177 ஆக பதிவாகியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசை குற்றம் சாட்டுகிறது திமுக - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details