குன்னூர் காந்திபுரத்தை சேர்ந்த அசோக் குமார் ஹாக்கி நீல்கிரிஸ் அணியில் விளையாடி வந்தார். 2015-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஸ்போர்ட்ஸ் மெக்கானிக் அமைப்பில், விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக ஹாக்கி நீல்கிரிஸ் மூலம் அந்நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து இந்திய ஹாக்கி அணிகள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகள் அனைத்திற்கும் தொழில்நுட்ப உதவியை இவர் வழங்கினார்.
குன்னூர் டூ டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கி அணிக்கு புதிய வீடியோ அனலிஸ்ட் - hockey team
நீலகிரி: ஹாக்கி வீரர் அசோக் குமார் (30) டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய ஹாக்கி அணியின் வீடியோ அனலிஸ்டாக பங்கேற்க நீலகிரி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக சென்றுள்ளார்.
இவரது தந்தை சின்னச்சாமி குன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார். தாயார் ராஜலட்சுமி அவ்வப்போது தினக்கூலி அடிப்படையில் பணியாற்றினார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து ஒரு விளையாட்டிற்கு தொழில்நுட்ப ஆலோசகராக இவர் உயர்ந்திருப்பதுரசிகர்கள் அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது குடும்பத்தினரும், அவரது இல்லத்தில், இன்று ஹாக்கி நீலகிரி அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.