தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல்! - வெங்காய விலை

சென்னை: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

onion prices

By

Published : Nov 5, 2019, 10:40 AM IST

வெங்காயம் அதிக அளவில் விளையும் பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக தற்காலிகமாக வெங்காய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் தலைமையில் உயர் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சில்லறை விற்பனையாளர்கள் 10 மெட்ரிக் டன், மொத்த விற்பனையாளர்கள்50 டன்னுக்கு அதிகமாக வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியிலுள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயத்தினை கொள்முதல் செய்திட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் சென்றுள்ளனர்.

அங்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயம், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் தற்காலிக வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என கூட்டுறவுத் துறை அமைச்சரும் உணவுத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோயம்பேடு மார்கெட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details