தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தினக்கூலிக் கேட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட 392 ருபாய் தினக்கூலியை கொடுக்க மறுப்பதை கண்டித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்னை குடிநீர் வாரியம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

protest
protest

By

Published : Aug 10, 2020, 2:22 PM IST

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியத்தில் 800-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக குறைந்தபட்சம் 392 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், தற்போது வரை அந்த தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னும் கூட ஒப்புக்கொண்டபடி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க ஒப்பந்ததாரர்கள் மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மேலும், கரோனா தொற்று தடுப்பு பணியில் இருந்தபோது உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க:உயிர் பயத்தால் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா பாதித்த மூதாட்டி

ABOUT THE AUTHOR

...view details