சென்னை: விமான நிலைய சரக்கக பிரிவிற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த கொரியர் பார்சல்களை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆந்திரா மற்றும் சென்னைக்கு 3 பார்சல்கள் வந்திருந்தன. அந்த பார்சலில் வாழ்த்து அட்டை என இருந்தது.
சந்தேகம் அடைந்த அலுவலர்கள் முதல் பார்சலை பிரித்து பார்த்த போது 52 பச்சை நிற போதை மாத்திரைகள் இருந்தன. இரண்டாவது பார்சலில் 24 கிராம் உயர் ரக கஞ்சாவும், மூன்றாவது பார்சலில் போதை பவுடரும் இருந்தது.