தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு கட்டும் பணி பாதியில் நிறுத்தி வைப்பு- தட்டிக்கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல் - chennai crime news

சென்னை: குன்றத்தூர் அருகே வீடு கட்டும் பணியை பாதியில் நிறுத்தியதை, தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்டிகேட்ட உரிமையாளருக்கு சரமாரி தாக்கு
தட்டிகேட்ட உரிமையாளருக்கு சரமாரி தாக்கு

By

Published : Oct 7, 2020, 9:54 AM IST

சென்னை மாங்காடு அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அதேபகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் அருகில் உள்ள பகுதியில் தனக்கு சொந்தமாக வீடு கட்டிவருகிறார். அதற்காக அந்த பகுதியை சேர்ந்த மேஸ்திரி குமாரிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக வீடு கட்டும் பணி நடைபெறாமல் உள்ளது.

இதுகுறித்து மேஸ்திரி குமாரிடம் கேட்டபோது மேற்கொண்டு 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் வீட்டை கட்ட முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று(அக்.06) மேஸ்திரி குமார் அவரது மகன் மற்றும் உறவினரை அழைத்துக்கொண்டு ஜெயக்குமார் நடத்தி வரும் கடைக்கு சென்றார். அப்போது கடையிலிருந்த ஜெயக்குமாரின் உறவினரான அருண்குமார் என்பவரை அவர்கள்சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

தட்டிகேட்ட உரிமையாளருக்கு சரமாரி தாக்கு

இந்த கலவரத்தில் கடையில் இருந்த பொருள்கள் சிதறியது. மேலும் அருண்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டள்ளது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து தலைமறைவான நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:உதவி ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details