சென்னை:தமிழ்நாட்டில்மிகவும் பிரசித்திபெற்ற கோயிலில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோயில். இந்த கோயிலில் அம்மன் சயனநிலையில் இருக்கும் வடிவத்தைக் காண முடியும். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமாக வருகை புரிந்து வருகின்றனர்.
இன்று (ஏப்-6) சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 12 ஆண்டுகள் ஆகம விதிப்படி குடமுழுக்கு செய்யப்படாத அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.