தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்குநேரி வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் படையினரை குவிக்க காங்கிரஸ் சார்பில் மனு! - நாங்குநேரி வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு படையினரை குவிக்க காங்கிரஸ் சார்பில் மனு

சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதி வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படையினரை கூடுதலாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

ele

By

Published : Oct 18, 2019, 5:36 PM IST

இதுத் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில், "நாங்குநேரி தொகுதியில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தேர்தல் நடக்கும் வாக்குச் சாவடிகளில் கூடுதலாக மத்திய காவல் படையினரை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும்.

திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது

இதுத் தொடர்பான கோரிக்கை மனுவை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: http://நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details