சென்னை:பாஜக தலைமையிலான மத்திய அரசு மூன்று வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக தொடர்ந்து விவசாயிகள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் ஏர் கலப்பை ஊர்வலம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தகவல் தெரிவித்தார்.