இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு, பலியான இளம் தலித் பெண்ணின் இறப்பிற்கு நீதி வேண்டியும், தலைவர் ராகுல் காந்தியை தாக்கிய காவல் துறையின் அராஜகப் போக்கை கண்டிக்கும் வகையிலும் இன்று (அக். 6) மாலை 4 மணி முதல் 6 மணிவரை சத்தியாகிரக அறவழிப் போராட்டம் கீழ்க்கண்ட இடத்தில் நடைபெறும்
ஹத்ராஸ் பெண்ணிற்கு நீதி வேண்டி அறவழிப் போராட்டம் நடத்தவுள்ள காங்கிரஸ்...! - ஹத்ராஸ் சம்பவம்
சென்னை: ஹத்ராஸ் பெண்ணிற்கு நீதி கேட்டு, காங்கிரஸ் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக். 6) மாலை அறவழிப் போராட்ட நடைபெறவுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
ஹத்ராஸ் பெண்ணிற்கு நீதி வேண்டி அறவழிப் போராட்ட நடத்தவுள்ள காங்கிரசார்...!
தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் ராஜ்குமார் முன்னிலையில், சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுப்பினர் எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெறும். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. கண்டன உரை நிகழ்த்துவார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...'ஜனநாயகத்திற்காக குரல் கொடுங்கள்' டிஜிட்டல் பரப்புரை மேற்கொள்ளும் காங்கிரஸ்!