இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியலை இணையதளத்தில் ஏற்றுவதில் ஒவ்வொரு மாதமும் குழப்பம் உள்ளதாக புகார் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம்! - ஸ்டாலின் உறுதி - திமுக
திமுக ஆட்சியில் குழப்பங்கள் களையப்பட்டு, குறித்த தேதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
stalin
இரு ஆண்டுகளில் ஒரு மாதம் கூட குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், பல இடங்களில் பிப்ரவரி மாதச் சம்பளமே வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அடுத்து அமையப்போகும் திமுக ஆட்சியில் இக்குழப்பங்கள் களையப்பட்டு குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி' - உதயநிதி
Last Updated : Mar 30, 2021, 9:31 PM IST