சென்னை மாநகராட்சியின் 12வது மண்டலமான ஆலந்தூரில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலந்தூர் மண்டல கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், வளசரவாக்கம் மண்டல கண்காணிப்பு அலுவலர் என்.வெங்கடேஷ், தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான், தமிழ்நாடு காவல்துறை அகாதமி கூடுதல் காவல்துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி, இந்தியக் காவல் பணி மண்டல அலுவலர்கள் எச்.முருகன், எஸ்.சசிகலா, காவல் துணை ஆணையர்கள் பிரபாகர், எம்.எஸ்.முத்துசாமி, அசோக்குமார், இன்ன பிற அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.