தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு: முதலமைச்சர் அறிவிப்பு - CM Condolence to Police died in country bomb blast

Tamilnadu CM Edappadi Palanisamy
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Aug 18, 2020, 6:30 PM IST

Updated : Aug 19, 2020, 2:14 AM IST

18:25 August 18

சென்னை: தூத்துக்குடி அருகே குற்றவாளியை பிடிக்கும்போது உயிரிழந்த காவலர் சுப்ரமணியனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அத்தனிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர். அப்போது காவல் துறையினரை பார்த்த துரைமுத்து
மற்றும் அவரது சகோதரர் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து, காவல் துறையினர் துரத்திப் பிடிக்க முற்பட்டனர். 

அந்த நேரத்தில் துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல் துறையினர் மீது வீசியதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என வந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். அரசுப் பணி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 50 லட்சம்
ரூபாய் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முறப்பநாடு அருகே பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசியதில் தனிப்படை காவலர் உயிரிழப்பு!

Last Updated : Aug 19, 2020, 2:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details