தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தகைசால் தமிழர்’ விருது: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதுபெரும் தலைவர்  சங்கரய்யா! - etv bharat

தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா நன்றி தெரிவித்துள்ளார்.

தலைவர் என். சங்கரய்யா நன்றி
தலைவர் என். சங்கரய்யா நன்றி

By

Published : Jul 28, 2021, 4:28 PM IST

சென்னை: இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில், "தமிழ்நாடு அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டு எனக்கு வழங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதிற்காக அளிக்கப்படும் 10 லட்சம் ரூபாய் தொகையினை கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்த அளவு பணியாற்றியுள்ளேன்.

சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன்.

எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details