தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு வேலை நிறுத்தம் நடத்த வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை - நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் முழு வேலை நிறுத்தத்தை நடத்த வேண்டும் என முதலமைச்சருக்கு கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

governor rejection of neet bill  communist party protest  Communist Party demand stalin to hold strike  full strike across Tamil Nadu  முழு வேலை நிறுத்தம் கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி  கம்யூனிஸ்ட் கட்சி  முதலமைச்சரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை  நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்  நீட் தேர்வு விலக்கு மசோதா
கம்யூனிஸ்ட் கட்சி

By

Published : Feb 7, 2022, 4:20 PM IST

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இடது தொழிற்சங்க மையம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், மக்களுக்கான மாணவர்கள் உள்ளிட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்தராஜ், "தமிழ்நாடு மக்களுக்கு எதிராக மற்றும் மாணவர் தற்கொலையை கண்டுகொள்ளாமல், ஆளுநர் நீட் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

'ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு கவர்னர் எதற்கு' என அண்ணா கூறியிருக்கிறார்.

அண்ணாவை வழங்கி, அண்ணா பொன்மொழிகளை பின்பற்றும் தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் உணர்வைப் புரிந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்து, தம் தமிழ்நாட்டில் ஒரு நாள் முழு வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டும். இதை நாங்கள் கோரிக்கையாக வைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூட்டுச்சதி வழக்கு: திலீப் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு ஜாமீன்

ABOUT THE AUTHOR

...view details