மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை தமிழ்நாடு மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்ஜிஆர் தற்போதும் ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். அவர் புகழ் என்றும் ஓங்கி நிற்கும். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது. திமுக அரசியல் செய்வதற்கு ஏதுமில்லை என்பதால் இதை கையில் எடுத்து சிறுபான்மையினர் பாதுகாவலர் போன்று நாடகமாடுகிறது.