கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் தங்கியிருந்து வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இதில் சென்னை விமான நிலையத்தில் தங்கி, கட்டுமானப் பணிகளை செய்து வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் பலர், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு சமீபத்தில் போராட்டங்கள் நடத்தினர். அப்போது அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்த ஊருக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருந்தனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்தல்: காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு! இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில் சிறப்புப் பேருந்துகள் மூலம் வட மாநிலத் தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதற்கட்டமாக நேற்று 300 வட மாநிலத் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலமான பீகார், ஹரியானா மாநிலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
இதற்கான ஏற்பாட்டை சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க...தனிமைப்படுத்தப்படும் வார்டை ஆய்வு செய்த காவல் ஆணையர்!