தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதிவுத்துறையில் ஜூலையில் ரூ. 1242.22 கோடி வருவாய்!

பதிவுத்துறையில் ஜூலை மாதத்தில், 1242.22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

commercial-tax-and-registration-department-revenue-in-july
பதிவுத்துறையில் ஜூலையில் ரூ. 1242.22 கோடி வருவாய்

By

Published : Aug 4, 2021, 4:29 AM IST

சென்னை:இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பதிவு துறையில் ஜூலை மாதத்தில், வருவாய் 1242.22 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது, இது சென்ற நிதியாண்டில் ஜூலை மாதம் ஈட்டப்பட்ட வருவாயைவிட ரூ. 598கோடி அதிகமாகும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையிலும், பதிவுத்துறை செயலாளர் மற்றும் பதிவுத்துறை தலைவர் முன்னிலையிலும் அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டங்களில் அரசின் வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்தவேண்டும். நிலுவை ஆவணங்கள் சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அறிவுறுத்தப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று காரணமாகவும், அரசின் ஊரடங்கு காரணமாகவும் பதிவுத்துறையில் கடந்த மாதங்களில் வருவாயனது 2019-20 நதிதியாண்டைக் காட்டிலும் குறைந்துள்ள நிலையிலும், ஜூலை மாதத்தில் ஈட்டப்பட்ட வருவாயனது மேலே கண்டுள்ள முயற்சிகளால் பேரிடர் ஏதும் இல்லாத காலத்திற்கான வருவாயினை நெருங்கியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு - நிதி அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details