சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த முறை வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த புதிய கட்டணங்கள் இன்று (ஜனவரி 1) முதல் அமலுக்கு வந்தது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு பெரு நகரங்களில் வர்த்தக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கூறிய நகரங்களின் சமயைல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து காணலாம்.