சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக அலுவலர்களை தொடர்ந்து கல்லூரியில் பயிலும் 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, மாவட்டவாரியாக உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் பயிலும் 18 வயது நிரம்பிய மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் விதமாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் நடத்திட பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு! - chennai district news
செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் மாவட்டவாரியாக 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு முழுமையான கரோனா தடுப்பூசி செலுத்திடும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்திட பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு
கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என அனைத்து கல்லூரி முதல்வர்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைத்து தடுப்பூசி முகாம் நடத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :தமிழ்நாட்டில் ஆயிரத்து 551 பேருக்கு கரோனா உறுதி