சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பசுபதி,
'பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க தேர்தல் நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் இடைக்கால நிர்வாகியாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ள அவர் விதிகளை மீறி நிர்வாகத்தில் தலையிட்டுவருகிறார்.
2012ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாகியாக இருந்தபொழுது எந்தவித நிர்வாக பணியிலும் குறுக்கீடு இன்றி செயல்பட்டார். இடைக்கால நிர்வாகியாக செயல்படும் ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் ஐந்து செயலாளர்களை இதுவரை மாற்றி நியமித்துள்ளார். கல்லூரியில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டினை களைய வேண்டும் என்பதற்காக நாங்கள் பலமுறை மனு அளித்தும் அவர் எங்களை சந்திக்கவில்லை.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி, கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் மாணவர் சேர்க்கை குறித்து மே 31ஆம் தேதி மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் கல்லூரியில் மாணவர்கள் அதிக அளவில் சேர வாய்ப்பு உள்ளது. கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு அக்கறை இல்லாததே இதற்கு காரணம்' என தெரிவித்துள்ளார்.