தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை அகதிகள் முகாமில் ஆட்சியர் திடீர் சோதனை - சென்னை

சென்னை: புழல் சிறை அடுத்த காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பதை கண்டறிய சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டார்.

chennai

By

Published : May 29, 2019, 7:10 PM IST

புழல் சிறையை அடுத்த காவாங்கரை பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள 323 குடியிருப்புகளில் மொத்தம் 947 பேர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் இன்று திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது, முகாமில் அனுமதியின்றி யாரேனும் வசித்துவருகிறார்களா ? குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக செயல்பட்டுவருகிறதா? உள்ளிட்டவை குறித்து அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டறிந்தார்.

இலங்கை முகாமில் ஆட்சியர் சோதனையிடும் காட்சிகள்

அந்த ஆய்வின்போது, இந்திய அகதிகள் முகாம் கூடுதல் செயலாளர் கிருஷ்ண பகதூர் சிங், மறுவாழ்வு மைய இயக்குநர் தினேஷ் பொன் ராஜ் , வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், மாதவரம் வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details